முடக்குவாதம் வந்து முடங்கியவர்கள் இந்த சூப் குடித்துவந்தால் முடக்குவாதம் குணமாகும்.
முடவாட்டுக்கால் சூப் எடுத்துகொள்வதன் மூலம் மூட்டு வலி வராமலே தவிர்க்க முடியும்.
முடவாட்டுக்கால் சைவ ஆட்டுக்கால் சூப் என்று அழைக்கிறார்கள். முடவன் ஆட்டுக்கால் தான் முடவாட்டுக்கால் என்றழைக்கப்படுகீறது. இது தாவரத்தின் கிழங்கு ஆகும். மலைப்பகுதிகளில் மட்டும் விளையக்கூடியது.
மலைக்காடுகளில் உள்ள பாறைகள், மரங்களின் மீது மட்டுமே வளரக்கூடியது. இது கொல்லிமலையிலும் சேர்வராயன் மலையிலும் கிடைக்கிறது. இந்த முடவாட்டுக்கால் கிழங்குங்கு வேர்கள் கிடையாது. பாறைகளில் விளையக்கூடிய இவை செம்பு, தங்கம், இரும்பு, கால்சியம் மற்றும் பாறைகளில் இருக்கும் சிலிக்காவை உறிஞ்சும் தன்மை கொண்டது.
சித்தர்கள் வாதம், பித்தம், கபம் என்னும் நோயை விரட்டை இதை ஒரு மண்டலம் வீதம் சாப்பிட்டு வர வேண்டும் என்கிறார்கள்.
எலும்புக்கு நன்மைகள்
குழந்தைகளுக்கு வாதம் தாக்கினால் இந்த கிழங்கு போட்டு கொதிக்க வைத்த நீரில் குளிக்க வைத்தால் வாத நோய் குணமாகும். கழுத்து வலி, தோள்பட்டை வலி, முதுகு வலி போன்றவற்றை குணப்படுத்தும்.
இதன் பெயரே சொல்லும் நோய் தீர்க்கும் தன்மையை . முடவன் ஆட்டும் கால் என்பதாகும். முடக்குவாதம் வந்து முடங்கியவர்கள் இந்த சூப் குடித்துவந்தால் முடக்குவாதம் குணமாகும்.